சினிமா செய்திகள்

இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal requests people to back small business after lockdown

இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்

இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்
கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு உள்நாட்டு வணிகர்களுக்கு உதவும்படி நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு உள்நாட்டு வணிகர்களுக்கு உதவும்படி நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“கொரோனாவால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க நம்மால் உதவி செய்ய முடியும். அனைவரும் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். சிறு வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகளை வாங்கி அவர்களை ஊக்குவியுங்கள். வணிகர்கள் மீண்டும் தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு உங்கள் ஆதரவு தேவை. அவர்களுக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துவிட்டு, நமது நாட்டுக்குள்ளேயே சுற்றுலா செல்வோம். நமது ஊரில் உள்ள உணவகங்களில் சாப்பிடுவோம். இந்திய உடைகளையே வாங்குவோம். இதன்மூலம் நமது ஊரில் உள்ள வியாபாரிகளை ஊக்குவிக்க முடியும்”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடப்பது போரடிக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள். கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்று சொல்லும்போது, நாம் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருப்பதில் தவறு இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால்
வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
2. ஜெர்மனியில் சம்பவம்: கொரோனா ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டி
ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து 101 வயது பாட்டி தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. புதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் -காஜல் அகர்வால்
புதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.