சினிமா செய்திகள்

எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா? தமன்னா வருத்தம் + "||" + Tamanna upset on Rumor claims she is not getting chances cinima

எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா? தமன்னா வருத்தம்

எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா? தமன்னா வருத்தம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்து தமன்னா கூறியதாவது:-

எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இனிமேல் சினிமாவில் எனக்கு எதிர்காலம் இல்லை என்றும் பேசுகிறார்கள்.

இப்படி வதந்தி பரப்புகிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் 365 நாட்களும் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடித்து வருகிறேன். நான் யாருக்கும் போட்டியாகவும் இல்லை.

தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.

வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை. இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுத்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கபடியை பற்றிய நுணுக்கங்கள், கபடி வீராங்கனையின் உடல் மொழி போன்றவற்றை கற்றுக்கொண்டு நடித்து வருகிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
2. மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம்
4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
3. நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
4. நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.
5. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.