சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர் + "||" + Sonu Sood, offers his hotel for healthcare workers to stay amid coronavirus outbreak, calls them 'real heroes'

கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்

கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை நடிகர் சோனு சூட் வழங்கி உள்ளார்.
மும்பை

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும், அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் திரட்டும் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கும் பணத்தை அள்ளி வழங்குகிறார்கள். ஏழைகளுக்கு உணவும் வழங்குகின்றனர்.

இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளார்.அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மக்கள் உயிரை காப்பாற்ற இரவும்-பகலும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் என்னால் இயன்ற உதவியாக இதை செய்துள்ளேன்” என்றார்.

 சோனுசூட் தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
2. சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருவோர் விவரம்
சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
4. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.