கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு: அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேசுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்


கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு: அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேசுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 18 April 2020 5:55 AM GMT (Updated: 2020-04-18T11:25:18+05:30)

அனுஷ்கா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

அனுஷ்கா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கு படங்களில் நடித்து பிரபல கதாநாயகியாக உயர்ந்தார். நடிகர் ஆர்யா, தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகிய இருவருடனும் அனுஷ்கா இணைத்து பேசப்பட்டார். பிரபாசை தீவிரமாக காதலிக்கும் அவர், பிரபாசையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த கிசுகிசு பற்றி கவலைப்படாத பிரபாஸ், “எனக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் இல்லை. அனுஷ்கா என் நல்ல சினேகிதி. எனக்கு குடும்பத்தில் வேறு பெண் பார்க்கிறார்கள்” என்று சமீபத்தில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை தேடும் வேலை தீவிரமாகி இருக்கிறது. மாப்பிள்ளை பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதி. “என்னை விட மாப்பிள்ளை ஒரு அங்குலமாவது உயரமாக இருக்கணும்” என்று குடும்பத்தினரிடம் அனுஷ்கா கூறியிருக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாம்.

திரிஷாவுக்கு அவருடைய தாயார் உமா கிருஷ்ணன் சில ஆண்டுகளாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இதற்கிடையில் அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் வரை நெருங்கி, பின்னர் பிரிந்து விட்டதாக பேசப்பட்டது. பின்னர் திரிஷாவுக்கு அவருடைய தாயார் மிக தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார். “மாப்பிள்ளை என்னை புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும்” என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் திரிஷா தனது தாயாரிடம் கூறியிருக்கிறார். அதோடு மாப்பிள்ளை பெரும் கோடீஸ்வரராக இருக்க வேண்டுமாம்.

மாப்பிள்ளை வேட்டை நடத்தும் இன்னொரு கதாநாயகி, கீர்த்தி சுரேஷ். இவருக்கும் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். மாப்பிள்ளை குறைந்தபட்சம் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு உரிமையாளராக இருக்க வேண்டும் என்பதே இவருக்கு மாப்பிள்ளை தேடும் உறவினர்களின் ஒரே நிபந்தனை. “நாங்கள் தயார்... கோடீஸ்வரர்கள் தயாரா?” என்று மூன்று நடிகைகளும் வலைவீசி இருக்கிறார்கள். சிக்குபவர்கள் யாரோ?

Next Story