கொரோனாவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பலி

கொரோனாவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ பலியானார்.
நியூயார்க்,
கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் தவிக்கின்றன. இந்த தொற்றுநோய்க்கு நடிகர்-நடிகைகளும் பலியாகி வருகிறார்கள்.
தற்போது பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனா தொற்றுநோயில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 77. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
இவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி, தி கலர் பர்பிள், எம்பயர் ஆப் தி சன், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆலன் டாவ்யூ 5 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது.
ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் தொடர்ச்சியாக பலியாவது நடிகர்-நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Related Tags :
Next Story