கொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால்


கொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 18 April 2020 6:36 AM GMT (Updated: 2020-04-18T12:06:07+05:30)

வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார். ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது.

Next Story