“ராம்போ” நடிகர் பிரையன் டென்னஹி மரணம்


“ராம்போ” நடிகர் பிரையன் டென்னஹி மரணம்
x
தினத்தந்தி 19 April 2020 4:39 AM GMT (Updated: 2020-04-19T10:09:11+05:30)

“ராம்போ” நடிகர் பிரையன் டென்னஹி மரணம் அடைந்தார்.

நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் நடிகர் பிரையன் டென்னஹி. ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 1982-ம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டோலனுடன் இணைந்து ராம்போ, பஸ்ட் பிளட் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தின. டாம்மி பாய், டூ கேட்ச எ கில்லர், ஸ்ப்ளிட் இமேஜ், லீகல் ஈகிள்ஸ், பிராபட் ஆப் ஈவில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிரையன் டென்னஹிக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக நியூ கேவன் நகரில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. பிரையன் டென்னஹி மரணம் அடைந்த தகவலை அவரது மகளும் நடிகையுமான எலிசபெத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். “வயது மூப்பால் எனது தந்தை இறந்து விட்டார். அவர் நேர்மையானவர். அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை, இயற்கையாக மரணம் அடைந்தார்” என்று கூறியுள்ளார். பிரையன் டென்னஹி மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story