இன்று நேற்று நாளை, சூதுகவ்வும் 2-ம் பாகங்கள்


இன்று நேற்று நாளை, சூதுகவ்வும் 2-ம் பாகங்கள்
x
தினத்தந்தி 19 April 2020 5:10 AM GMT (Updated: 2020-04-19T10:40:31+05:30)

இன்று நேற்று நாளை, சூதுகவ்வும் 2-ம் திரைக்கதை பாகங்கள் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ், அயர்ன் மேன், ஜூராசிக் பார்க், ஹரிபாட்டர், கிங்காங், ஜான்விக் உள்ளிட்ட பல படங்களின் பல்வேறு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. 

அதுபோல் தமிழிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. எந்திரன், காஞ்சனா, பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, அரண்மனை, சாமி, சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம் படம் 3 பாகங்களாக வந்தது.

இதைபோல் விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது என்றும், ஊரடங்கு முடிந்ததும் பட வேலைகள் தொடங்கும் என்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெயிண்ட் பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இதுபோல் சூதுகவ்வும் படம் விஜய் சேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா? என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டார். அதிகமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சூதுகவ்வும் 2-ம் பாகத்தின் பட வேலைகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Next Story