சினிமா செய்திகள்

விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? விவேக், கஸ்தூரி காட்டம் + "||" + Will Vijay and Ajith fans clash?

விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? விவேக், கஸ்தூரி காட்டம்

விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? விவேக், கஸ்தூரி காட்டம்
விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? என விவேக், கஸ்தூரி காட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை,

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் அதிரும்படி அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. புதிய படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம். இந்த சண்டை தீவிரமாக நடக்கும். பல நடிகர்-நடிகைகள் மோதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சமீபத்தில் தொலைக்காட்சிகளில் இருவரது படங்கள் ஒளிபரப்பானதையடுத்து, இந்த தகராறு மீண்டும் தலைதூக்கி உள்ளது. ஒருவரையொருவர் காரசாரமாக தாக்கி கருத்துகள் பதிவிட்டனர். இதனால் சமூக வலைத்தளம் பரபரப்பானது. இந்த மோதலை நடிகர் விவேக், நடிகை கஸ்தூரி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“அஜித்தும், விஜய்யும் எந்த குறையும் இல்லாமல் நல்லா இருக்க வேண்டும். இருப்பார்கள். வெட்டி பயலுங்க சாபத்தினால் அவர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால் அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவர்களுக்கு இதுதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். வாழு வாழ விடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏற்கனவே வெளியிட்ட பதிவு ஒன்றில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதலை கைவிட்டு நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நடிகர் விவேக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனிநபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டாக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி செய்தால் பிளாக் ஆகும். நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரை பயன்படுத்துகிறேன். பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர் :"எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
2. விஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகுமா?
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
3. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்?
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.
4. திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்