கொரோனா களப்பணியாளர்களுக்கு பால்கனியில் இருந்து பாடல் பாடிய நடிகர் மிச்சேல்


கொரோனா களப்பணியாளர்களுக்கு பால்கனியில் இருந்து பாடல் பாடிய நடிகர் மிச்சேல்
x
தினத்தந்தி 19 April 2020 8:56 AM GMT (Updated: 19 April 2020 8:56 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மக்கள் கை தட்டி உற்சாகமூட்டும் நிகழ்வு நடைபெற்றது.


நியூயார்க்,

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையப்புள்ளியான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தநிலையில் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மக்கள் கை தட்டி உற்சாகமூட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிலையில் நியூயார்க் நகரில் உள்ள லாங்ஒன் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு அப்பகுதி காவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். 

தங்கள் வந்திருந்த வாகனங்களின் சைரன் விளக்கை ஒளிரவிட்டிருந்த காவலர்கள், சைரனை ஒலித்தும் தங்கள் சார்பில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். காவலர்களின் இத்தகைய செயல் தங்களுக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தத்தைக் குறைப்பதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான காவலர்கள் இணைந்து மருத்துவப் பணியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகர் மிச்சேல் தனது வீட்டு பால்கனியில் இருந்து பாடல் பாடி கை தட்டி உற்சாகமூட்டினார்.

Next Story