அரசு டுவிட்டர் கணக்குகளை ஒழிக்க வேண்டும்: கங்கனா ரனாவத் ஆவேசம்


அரசு டுவிட்டர் கணக்குகளை ஒழிக்க வேண்டும்: கங்கனா ரனாவத் ஆவேசம்
x
தினத்தந்தி 19 April 2020 10:59 AM GMT (Updated: 19 April 2020 10:59 AM GMT)

அரசு டுவிட்டர் கணக்குகளை ஒழிக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தி நடிகை கங்கனா ரனாவத்  தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி' யில் நடித்து வருகிறார்.

இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை கங்கனா ரனாவத் பெற்றுள்ளார். இவர் சகோதரி ரங்கோலி. கங்கனாவின் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களைப் பற்றி பதிவிட்டிருந்தார். அதற்கு பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது .அது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கனா ரனாவத். 

அதில் பேசுகையில், "மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று என் சகோதரி சொன்னார். எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும் பேசவில்லை. இங்கு பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை டுவிட்டர் ஒன்றும் செய்வதில்லை. 

உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கிறது. டுவிட்டர் போன்ற தளங்களை ஒழிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும்  என ஆவேசமாக கூறியுள்ளார்.

Next Story