சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படம் ஜுன் 22-ம் தேதி திரைக்கு வர வாய்ப்பு? + "||" + The master film is set to hit the screens on June 22

மாஸ்டர் திரைப்படம் ஜுன் 22-ம் தேதி திரைக்கு வர வாய்ப்பு?

மாஸ்டர் திரைப்படம் ஜுன் 22-ம் தேதி திரைக்கு வர வாய்ப்பு?
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 22-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள்.

விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச் 15 அன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், "எனது ரசிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் வருத்தப்படுகிறேன். இதை நாங்கள் ஒரு தனியார் நிகழ்வாக செய்தோம். ரசிகர்களுக்கு நன்றி." என தெரிவித்தார். 

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தயாரிப்பாளர்களால் படத்தை திட்டமிடப்பட்ட தேதியில் வெளியிட முடியவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில்  விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று இந்த திரைப்படத்தினை வெளியிட தற்போது படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.