வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட இந்தி நடிகர் கைது


வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட இந்தி நடிகர் கைது
x
தினத்தந்தி 20 April 2020 4:58 AM GMT (Updated: 2020-04-20T10:28:33+05:30)

இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் நடிகர் அஜாஸ் கான். இவர் தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தின் இந்திப் பதிப்பு, அல்லா கி பந்தா உள்ளிட்ட பல ஹிந்திப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக அஜாஸ் கானை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கிலும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.

Next Story