கொரோனா விழிப்புணர்வு பணி தன்னார்வலராக மாறிய சசிகுமார்


கொரோனா விழிப்புணர்வு பணி தன்னார்வலராக மாறிய சசிகுமார்
x
தினத்தந்தி 20 April 2020 5:14 AM GMT (Updated: 2020-04-20T10:44:16+05:30)

கொரோனா விழிப்புணர்வு பணியில் நடிகர் சசிகுமார் தன்னார்வலராக மாறி பணியாற்றி உள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதையும் மீறி மக்கள் வெளியில் நடமாடுகின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு, வீட்டில் இருக்கும்படி வற்புறுத்துகின்றனர். சிலர் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாகவும் இணைந்து வேலை செய்கிறார்கள். நடிகை நிகிலா விமல், கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலத்தில் இருந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறார். இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாக மாறி இருக்கிறார்.

இதுபோல் நடிகர் சசிகுமாரும் மதுரையில் கொரோனா விழிப்புணர்வு தன்னார்வலராக பணியாற்றி உள்ளார். போலீசாருடன் வீதிவீதியாக சென்று மக்களை வீட்டில் இருக்கும்படி பிரசாரம் செய்தார். சாலைகளில் போலீசாருடன் நின்று மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி வெளியே சுற்றாமல் வீடுகளில் இருக்கும்படி அறிவுரைகள் வழங்கினார். போலீஸ் நிலையத்துக்கு சென்றும் பணிசெய்தார்.

இதுகுறித்து சசிகுமார் கூறும்போது, “அரசு தீவிர பிரசாரம் செய்த பிறகும் மக்களுக்கு கொரோனாவின் ஆபத்து புரியவில்லை. மோட்டார் சைக்கிளில் பலர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். போலீசாருடன் இணைந்து அனைவரும் வீட்டில் இருங்கள் என்று பிரசாரம் செய்தேன். தன்னார்வலராக பணியாற்றியது புதுமையாக இருந்தது” என்றார்.

Next Story