சினிமா செய்திகள்

டிக் டாக்கில் இறங்கி ரசிகர்களை குஷிபடுத்தும் நடிகை திரிஷா + "||" + Actress Trisha is currently joining the cast of Tamil Cinema in Tic Tac.

டிக் டாக்கில் இறங்கி ரசிகர்களை குஷிபடுத்தும் நடிகை திரிஷா

டிக் டாக்கில் இறங்கி ரசிகர்களை குஷிபடுத்தும் நடிகை திரிஷா
நடிகை திரிஷா டிக் டாக்கில் கணக்கை துவங்கி தனது ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.
சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

96 படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் நல்ல ஒரு கம்பேக் கிடைத்தது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசி நாயகியாக வலம் வந்த நடிகை திரிஷா, திடீரென பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் ஏற்பட்டு இருப்பதால், கேமரா முன்னாடி நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் படங்களில் நடிக்க வேண்டிய நடிகை திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட்டில் கணக்கை துவங்கி தனது ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரிஸிலும் டிக் டாக் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.