சினிமா செய்திகள்

கொரோனா நிவாரணத்துக்கு இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி நிதி திரட்டிய பாப் பாடகி + "||" + I endured eight gruelling hours of Lady Gaga’s ‘One World: Together At Home’

கொரோனா நிவாரணத்துக்கு இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி நிதி திரட்டிய பாப் பாடகி

கொரோனா நிவாரணத்துக்கு இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி நிதி திரட்டிய பாப் பாடகி
கொரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடி திரட்டியுள்ளார் பாப் பாடகி லேடி காகா.
நியூயார்க்,

புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, காட்சி ஊடகத்தில் (விசுவல் மீடியா) சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை வென்றவர். கடந்த ஆண்டும் இதே பிரிவிலும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பாடலுக்கான கிராமி 
விருதுகளை லேடி காகா வென்றுள்ளார்.

இந்தநிலையில், கொரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார். ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. 

ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்தியப் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 

கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளைகள் நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டுமல்லாது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.  

நல்ல நோக்கத்துக்காக  நடத்தப்படும் இசை நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களும் நிறுவனங்களும் ஏராளமான நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்துறை ஊழியர்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சி வழியே நிதி திரட்டப்படுகிறது என கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...