“டாம் அண்ட் ஜெர்ரி ” கார்ட்டூன் பட இயக்குனர் மரணம்


“டாம் அண்ட் ஜெர்ரி ” கார்ட்டூன் பட இயக்குனர் மரணம்
x
தினத்தந்தி 21 April 2020 4:38 AM GMT (Updated: 21 April 2020 4:38 AM GMT)

“டாம் அண்ட் ஜெர்ரி ” கார்ட்டூன் பட இயக்குனர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார்.

சிக்காகோ,

உலக அளவில் புகழ் பெற்ற கார்ட்டூன் படம் டாம் அண்ட் ஜெர்ரி. எலிக்கும் பூனைக்கும் இடையே நடக்கும் மோதலை வைத்து வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டு இருந்தது. 1990-களில் குழந்தைகள் மத்தியில் டாம் அண்ட் ஜெர்ரி தொடர் அமோக வரவேற்பை பெற்றது. பெரியவர்களும் ரசித்து பார்த்தனர்.

இந்த தொடரை இயக்கியவர் ஜீன் தீச். அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் பிறந்த இவர் பராகுவேயில் வசித்து வந்தார். ஜீன் தீச்சுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.

ஜீன் தீச் ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி, பின்னர் அனிமேஷன் துறைக்கு வந்தார். சிட்னி தி எலிபண்ட், க்ளிண்ட் க்ளாபர் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். இதுபோல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாப்பாய் என்ற தொடரையும் இயக்கினார்.

ஜீன் தீச் உருவாக்கிய ‘முன்ரே’ என்ற கார்ட்டூன் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருதை வென்றது. இதுபோல் இவர் இயக்கிய ஹியர்ஸ் நட்னிக், ஹவ் டு அவாய்ட் ஆகிய அனிமேஷன் குறும்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அவரது மறைவுக்கு பல துறைகளில் உள்ள கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story