கொரோனாவால் ரத்தம் பற்றாக்குறை: ரத்ததானம் செய்த நடிகர் சிரஞ்சீவி


கொரோனாவால் ரத்தம் பற்றாக்குறை: ரத்ததானம் செய்த நடிகர் சிரஞ்சீவி
x
தினத்தந்தி 21 April 2020 5:17 AM GMT (Updated: 21 April 2020 5:17 AM GMT)

கொரோனாவால் ரத்தம் பற்றாக்குறை காரணமாக நடிகர் சிரஞ்சீவி ரத்ததானம் செய்துள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டும் நிவாரண நிதி வழங்கியும் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் ரத்ததானம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது;-

கொரோனா ஊரடங்கால் ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு குறைந்து இருப்பது ஆஸ்பத்திரி வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயாளிகள், இதய நோயாளிகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றோர் ரத்தம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்ற பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள ரத்ததான வங்கிக்கு சென்று ரத்ததானம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

Next Story