சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது + "||" + GV Prakash and Saindhavi blessed with baby girl

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
ஜி.வி.பிரகாஷ் சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
சென்னை,

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். வெயில் திரைப்படத்தின் மூலம்  
இவர்இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்புப் பெற்றது. ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பில் 

உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ஏ. ஆர். ரகுமானின்  சில படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் , சைந்தவி இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி தம்பதிக்கு தி.நகரில் உள்ள தனியார் 
மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகத்தினர் தொலைபேசியிலும் , குறுஞ்செய்தி மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.