8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்த கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி!


8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்த கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி!
x
தினத்தந்தி 21 April 2020 7:53 AM GMT (Updated: 2020-04-21T13:23:04+05:30)

தனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னை,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்தும் உள்ளது.

இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். 

இந்த கொரோனா லாக் டவுனால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்க வேண்டிய இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது வீட்டின் மொட்டை மாடியில் காத்தாடி விட்டு மகிழும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரிஸில் போட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். 

இந்நிலையில், தனது வீட்டில் உள்ள ஜிம் ரூமில் வொர்க்கவுட் செய்யும் போது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். கீர்த்தி சுரேஷின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவுக்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

Next Story