மாஸ்டர் படம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டம்?


மாஸ்டர் படம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டம்?
x
தினத்தந்தி 22 April 2020 4:55 AM GMT (Updated: 2020-04-22T10:25:19+05:30)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த மாதம் வெளியாக வேண்டிய பல படங்கள், ரிலீஸ் பிரச்சினையில் சிக்கி உள்ளன. இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் அடக்கம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 9ம் தேதி ரிலீசாவதாக இருந்தது. மாஸ்டர் ரிலீஸ் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகளை வரும் மே 3ம் தேதிக்கு பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story