சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கில் தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்திய நடிகர் சதீஷ் + "||" + actor sathish turns barber for his father

கொரோனா ஊரடங்கில் தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்திய நடிகர் சதீஷ்

கொரோனா ஊரடங்கில் தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்திய நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ் தனது தந்தைக்கு வீட்டிலேயே ஷேவ் செய்து விட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
சென்னை,

கொரொனா ஊரடங்கு காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். 

இந்தநிலையில் நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் ஆவார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படங்களில் ஷூட்டிங் எதுவும் நடைபெறததால் மற்றவர்களை போலவே சதீஷும் தனது வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகிறார். 

ஃபிரீயாக இருக்கும் நேரத்தில் அவர் சமூக வலைத்தளங்களில்  கவனம் செலுத்தி வருகிறார். அவர் இதற்கு முன்பு நடித்த படங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த பல காமெடியான விஷயங்களை அவர் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

தமிழ் படம் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பெண் வேடத்தில் இருந்தபோது எடுத்த வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜயகாந்திற்கு அவரது மனைவி ஷேவ் செய்துவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...