ரசிகர்களை மகிழ்ச்சியாக்கவே இதெல்லாம்.. ரசிகரின் டுவிட்டரை பகிர்ந்த நடிகர் விவேக்


ரசிகர்களை மகிழ்ச்சியாக்கவே இதெல்லாம்.. ரசிகரின் டுவிட்டரை பகிர்ந்த நடிகர் விவேக்
x
தினத்தந்தி 22 April 2020 6:25 AM GMT (Updated: 2020-04-22T11:55:32+05:30)

ரஜினியின் தர்பார் தீம் மியூசிக் உடன் எடிட் செய்யப்பட்ட தனது ஸ்டைலாக வீடியோவை நடிகர் விவேக் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை மக்களிடம் அமோக வரவேற்பவை பெற்றுள்ளது.  மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ்த் திரை உலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.  

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விவேக்கின் காமெடி ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைத்தது.

இந்நிலையில் விவேக் இதுவரை படங்களில் ஸ்டைலாக செய்த பல விஷயங்களை தொகுத்து வீடியோவாக ரஜினியின் தர்பார் தீம் மியூசிக் உடன் வெளியிட்டுளளார் ஒரு ரசிகர்.

அந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யப்பட்ட நடிகர் விவேக் அதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். "ரசிகர்களை மகிழ்ச்சியாக்கவே இதெல்லாம். நன்றி" என குறிப்பிட்டுள்ளார் அவர்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Next Story