எளிமையாக மாஸ்க் தயாரிப்பது எப்படி - வித்யாபாலன் விளக்கம்


எளிமையாக மாஸ்க் தயாரிப்பது எப்படி - வித்யாபாலன் விளக்கம்
x
தினத்தந்தி 22 April 2020 7:58 AM GMT (Updated: 2020-04-22T13:28:55+05:30)

எளிமையான முறையில் மாஸ்க் எப்படி செய்வது குறித்து நடிகை வித்யாபாலன் கற்று கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும். துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில், கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story