சினிமா செய்திகள்

சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட சாய் பல்லவி! + "||" + Sai Pallavi’s Emotional Birthday Wish To Sister Pooja Kannan Goes Viral

சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட சாய் பல்லவி!

சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட சாய் பல்லவி!
தங்கையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது சிறுவயது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
சென்னை,

மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்தார். தமிழில் தியா படத்தில் குழந்தைக்கு தாயாக வந்தார்.

அதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆட்டோ டிரைவர் வேடம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் ‘யூ-டியூப்’ தளத்தில் 100 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் பார்த்து ரசித்தனர்.

தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரட்ட பர்வம் என இரண்டு படங்களில் நடித்துவருகிறார் சாய் பல்லவி. இந்நிலையியல், தனது தங்கையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சிறு வயதில் தனது தங்கையை தனது இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரங்கு... என செல்லமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை சாய் பல்லவி கூறியுள்ளார்.