நடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்?


நடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்?
x
தினத்தந்தி 23 April 2020 5:52 AM GMT (Updated: 2020-04-23T11:22:08+05:30)

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழில் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தெலுங்கில் வெளியாக உள்ள உப்பெனா என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

மாஸ்டர் படத்தின் ஷீட்டிங்கின் போது உப்பெனா கதை குறித்து விஜய்யிடம் விஜய் சேதுபதி பேசினார் என்றும், அப்போது கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் சென்னை திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பழமையான காதல் கதை உப்பேனா படம் ஆகும்.  காக்கினாடா, ஐதராபாத், பூரி, கொல்கத்தா மற்றும் காங்டாக் ஆகிய இடங்களில் விரிவாக இந்த படம் படமாக்கப்பட்டது.

ஜேசன் சஞ்சய், நடிகர் விஜய்யுடன் போக்கிரி பொங்கல் என்ற பாடலில் சேர்ந்து நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

Next Story