சினிமா செய்திகள்

கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட் + "||" + Success is to applaud ArunVijay

கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட்

கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட்
நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.
சென்னை,

அருண் விஜய், தனது தந்தை விஜய குமார் மூலம் தமிழ் திரையுலகில் தொடக்கத்திலையே நாயகனாக நடித்து 1995ல் அறிமுகமானவர், அந்த காலகட்டத்தில் இவரின் திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பாண்டவர் பூமி, கங்கா கௌரி ஆகிய திரைப்படங்களை தவிர்த்து எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்க வில்லை, மூன்றாம் கட்ட நடிகராக தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்ட இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை 2015-ம் ஆண்டு முதல் உருவாக்கினார். இவரின் திரைவாழ்விற்கு முக்கிய திருப்புமுனை படமாக 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது.

இத்திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்து தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்தியா அளவில் பிரபலமாகியது எனலாம்.  இத்திரைப்படத்தில் உள்ள இவரின் வில்லன் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்து இவரை தமிழ் முன்னணி நடிகராக மாற்றியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னேறிய அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் ‘துருவங்கள் பதினாறு,‘ ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான கார்த்திக் நரேன் அடுத்து,‘ மாபியா’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

தற்போது அருண் விஜய் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி… தன்னம்பிக்கையோடு உழைத்திடு! உயர்ந்திடு!” என்று கூறியுள்ளார்.