சினிமா செய்திகள்

டுவிட்டரில் 40 மில்லியன் பாலோயர்களை கடந்த சல்மான்கான் + "||" + Salman Khan Gets 40M Twitter Followers, Justin Bieber's 'Special' Announcement

டுவிட்டரில் 40 மில்லியன் பாலோயர்களை கடந்த சல்மான்கான்

டுவிட்டரில் 40 மில்லியன் பாலோயர்களை கடந்த சல்மான்கான்
நடிகர் சல்மான்கான் டுவிட்டரில் 40 மில்லியன் பாலோயர்களை கடந்துள்ளார்.
மும்பை,

உலகளவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இந்தநிலையில்  டுவிட்டரில் அமிதாப்பச்சன் 41.5 மில்லியன் பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இப்போது நடிகர் சல்மான் கான் 40 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என மொத்தமாக சல்மான் கான் 109 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கைப் பொறுத்தவரையில் 37.5 மில்லியன் பாலோயர்களைப் பெற்று சல்மான் கான் முதலிடத்தில் உள்ளதாகவும், இன்ஸ்டாகிராமில் அக்ஷய் குமார் 39.2 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்திலும், சல்மான் கான் 31.8 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்களைத் தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகமாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் மற்ற எந்த பிரபலங்களையும் விட சினிமா பிரபலங்களுக்குத்தான் பாலோயர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சினிமா பிரபலங்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. என் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர், நடிகையர் தேர்வா? சல்மான்கான் மறுப்பு
சல்மான் கான் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எந்த நடிகர் நடிகையர் தேர்வும் நடைபெறவில்லை என நடிகர் சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார்.
2. கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சல்மான்கான்!
கிராம மக்களுக்கு நிவாரண உணவுப் பொருட்களை வழங்க மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று சல்மான் கான் உதவி செய்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...