சினிமா செய்திகள்

லாக்டவுன் நேரத்தை சரியாக செலவிடுங்கள்: உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகை அமலா! + "||" + Akkineni Amala Shares Fitness Tips Amid Lockdown

லாக்டவுன் நேரத்தை சரியாக செலவிடுங்கள்: உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகை அமலா!

லாக்டவுன் நேரத்தை சரியாக செலவிடுங்கள்: உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகை அமலா!
லாக்டவுன் நேரத்தை சரியாக செலவிடுங்கள் என நடிகை அமலா கூறியுள்ளார்.
ஐதராபாத்,

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை  திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலா நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின் நடிப்பதை  நிறுத்தி விட்டார். தற்போது அமலாவிற்கு 52 வயதாகிறது. இந்த வயதில் மற்ற நடிகைகள் பெரும்பாலும் தங்களின் பேரன் பேத்திகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால் அமலாவோ கடினமான உடற்பயிற்சிகளை செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்த காணொளியில் இளைஞர்களுக்கு இணையாக பளுவை தூக்கி தோள்பட்டையில் வைத்து அசத்தி வருகிறார் அமலா. இந்த காணொளியின் இறுதியில் அமலா உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தே கட்டாயம் மேற்கொண்டு கொரோனா லாக்டவுன் நேரத்தை சரியாக செலவிடுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார்.