சினிமா செய்திகள்

கொரோனா ஆபத்து புரியாமல் சுற்றுகின்றனர் - நடிகர் சிவகார்த்திகேயன் + "||" + The corona rounds off without warning The actor is Sivakarthikeyan

கொரோனா ஆபத்து புரியாமல் சுற்றுகின்றனர் - நடிகர் சிவகார்த்திகேயன்

கொரோனா ஆபத்து புரியாமல் சுற்றுகின்றனர் - நடிகர் சிவகார்த்திகேயன்
கொரோனா ஆபத்து புரியாமல் பலர் சுற்றுகின்றனர் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே இருப்போம். வீட்டில் இருக்கும்போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பலர் சொல்லி விட்டனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே நிச்சயம் இந்த கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உலகின் தலைசிறந்த சொல், செயல். அதனை செய்து காட்டுவோம்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.