ரூ.300 கோடி செலவில் உருவாகும் விக்ரம் படம்


ரூ.300 கோடி செலவில் உருவாகும் விக்ரம் படம்
x
தினத்தந்தி 24 April 2020 5:39 AM GMT (Updated: 24 April 2020 6:17 AM GMT)

தமிழ் திரைப்பட உலகின் மிக பிரபலமான கதாநாயகர்களில் ஒருவர், விக்ரம்.

சென்னை,

தமிழ் திரைப்பட உலகின் மிக பிரபலமான கதாநாயகர்களில் ஒருவர், விக்ரம். ‘சேது’ படத்தில் இவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி, அந்த ஒரே படத்தில் இவரை நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகனாக உயர்த்தியது. இதையடுத்து அவர் நடித்த ‘தில்’, ‘தூள்’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘ஐ’ ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்தன.

தற்போது அவர், ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மஹாவீர் கர்ணா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கோப்ரா’ படத்தை அஜய் ஞானமுத்துவும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னமும், ‘மஹாவீர் கர்ணா’ படத்தை புதுமுக டைரக்டர் ஆர்.எஸ்.விமலும் டைரக்டு செய்கிறார்கள்.

‘மஹாவீர் கர்ணா’ படம், ரூ.300 கோடி செலவில் தயாராகிறது. கர்ணனாக விக்ரம் நடிக் கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரோனா பிரச்சினை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு வாபஸ் ஆனதும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் தெரிவித்தார்கள்.

‘‘இது, ஒரு சரித்திர படம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி வருகிறது’’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

Next Story