'காமிக்ஸ்’ புத்தகங்கள் படிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்


காமிக்ஸ்’ புத்தகங்கள் படிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 24 April 2020 7:00 AM GMT (Updated: 2020-04-24T12:30:38+05:30)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நின்று போய், நடிகர்-நடிகைகள் ஒரு மாதமாக வீட்டில் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் செய்தல், துணி துவைத்தல், ருசியான உணவுகள் சமைத்தல், வளர்ப்பு பிராணிகளை கொஞ்சுதல் என்று நேரத்தை கழிக்கிறார்கள். இதனை வீடியோவில் பதிவு செய்தும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காமிக்ஸ்’புத்தகங்கள் படித்து வருவதாக கூறியுள்ளார் .

 "மீண்டும் சிறு வயதுக்கே சென்றது போல், உணர்வு ஏற்படுகிறது" என்று குஷியாக சொல்கிறார். இப்போது பிரபலங்கள் பலரையும் இதுவரையில் இல்லாத செயல்களை செய்ய பழக்கியுள்ளது இந்த ஊரடங்கு காலம் என்றால் மிகையல்ல.

Next Story