சினிமா செய்திகள்

ரசிகர்களை திகைக்க வைத்த நடிகை நதியா! + "||" + The secret ingredient is creativit Actress Nadiya

ரசிகர்களை திகைக்க வைத்த நடிகை நதியா!

ரசிகர்களை திகைக்க வைத்த நடிகை நதியா!
நடிகை நதியா டுவிட்டரில் சமையல் பற்றியும், சமைக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றியிருக்கிறார்.
சென்னை,

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.   அவரது இரண்டு மகள்களுடன் அண்மையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் மூவரும் சகோதரிகள் போல இருப்பதாக கூறியிருந்தனர்.

லாக்டவுன் சமயத்தில் வீட்டிலே இருப்பதால் தனக்கு நினைவுக்கு வரும் பல விஷயங்களை புகைப்படங்களோடு பதிவேற்றி அதை நினைவுகூறி வருகிறார்.

இதில் தான் சமைக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படத்துடன் இந்த பதிவை பதிவேற்றியுள்ளார். இதில் நதியா லஸானியா என்ற மேல்நாட்டு உணவை செய்து இருக்கிறார். இந்த பதிவில் நதியா "இந்த உணவின் ரகசிய ரெசிப்பி படைப்பாற்றல்" தான் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நல்லா சமைக்கிறீங்க என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் பலர் புகைப்படங்களில் நதியாவை பார்த்து விட்டு உங்களின் இளமை உங்களை விட்டு இன்னும் போகவில்லை என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா
மகள்கள் புகைப்படத்தை நடிகை நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.