சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரை போற்று சுதந்திரத்தினத்தில் வெளியாக வாய்ப்பு? + "||" + Opportunity to release Surya's Surya and release in indipendnce day

சூர்யாவின் சூரரை போற்று சுதந்திரத்தினத்தில் வெளியாக வாய்ப்பு?

சூர்யாவின் சூரரை போற்று சுதந்திரத்தினத்தில் வெளியாக வாய்ப்பு?
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளதது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்த படம் வெளியாகவில்லை. கொரோனா காரணத்தினால் இந்த திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் இப்படத்திலுருந்து மேக்கிங் வீடியோ ஒன்று வெளியானது, அதில் நடிகர் சூர்யாவின் 19 வயது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படம் வரும் ஆகஸ்ட் மதம் 15 ஆம் தேதி சுதந்திரதினத்தில் வெளியாகும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், கொரோனா அச்சமெல்லாம் நீங்கிய பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.