சினிமா செய்திகள்

நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது - பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra's Sun Kissed Selfies Get Sweet Comment from Nick Jonas

நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது - பிரியங்கா சோப்ரா

நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது - பிரியங்கா சோப்ரா
நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் இந்த லாக்டவுனை கழித்து வருகிறார்.

பூமி தினத்தை முன்னிட்டு, இந்த கொரோனா காலத்தில் நாம் பிரிந்திருந்தாலும், நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது. இது நம்முடைய வீடு. பூமி தாயை ஒன்றாக குணப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவுக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் லைக் போட்டுள்ளனர். அவரது கணவர் நிக் ஜோனஸ் எமோஜிக்களை போட்டு, தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கடைசியாக தி ஸ்கை இஸ் பிங்க் எனும் பாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு சார்பாக உருவான ஒன் வேர்ல்ட் எனும் லைவ் இசை கச்சேரியில் தனது பங்களிப்பை கொடுத்திருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, கொரோனா நிதியாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அதாவது 73.6 லட்சம் ரூபாயை அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனது படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு கணவர் பரிசாக கொடுத்த நாய் குட்டியுடன் பொழுதை கழிக்கிறேன். கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன். இந்த நோய் வராமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவாக சொல்லி விட்டது. வீட்டிலேயே இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் என பிரியங்கா சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா
என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
3. மெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...