நடிகை ஜோதிகாவை விமர்சிப்பதா? டைரக்டர் சரவணன் கண்டனம்


நடிகை ஜோதிகாவை விமர்சிப்பதா? டைரக்டர் சரவணன் கண்டனம்
x
தினத்தந்தி 25 April 2020 5:09 AM GMT (Updated: 25 April 2020 5:09 AM GMT)

நடிகை ஜோதிகாவை விமர்சிப்பதா? என டைரக்டர் சரவணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பங்கேற்று பேசிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இந்து கடவுள்களை அவமதித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து, ஜோதிகா நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இரா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜோதிகா, சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அதன் படப்பிடிப்புக்காகத்தான் ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு நோயாளிகள் பகுதியை அவர் சுற்றிப்பார்த்தபோது குழந்தைக்கு கூட உரிய இடம் ஒதுக்கி கவனிக்க முடியாமல் மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து கலங்கினார்.

வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில் எதிரில் இப்படியோரு அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையா? என்பதுதான் அவரது வேதனையாக இருந்தது. அதனால் கோவில்க ளுக்கு நிகராக மருத்துவமனைகள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் எங்கே வந்தது பிழை. எப்படி கோவிலுக்கு எதிரானதாக அமையும்? ஜோதி காவுக்கு பெரிய கோவில் எவ்வளவு விருப்பமானது என்பதும், அதை எப்படி மதிப்பார் என்பதும் படப்பிடிப்பு குழுவினருக்கு தெரியும். தனது பிள்ளைகளுக்கு பெரிய கோவில் நினைவு சின்னங்களை அன்பு பரிசாக வாங்கி சென்றவர் அவர். இந்த கொரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளை கிளப்புவது மனசாட்சியற்றது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story