விலங்குகளைப்போல் கூண்டுக்குள் அடைபட்ட மனிதர்கள் - நடிகை தமன்னா


விலங்குகளைப்போல் கூண்டுக்குள் அடைபட்ட மனிதர்கள் - நடிகை தமன்னா
x
தினத்தந்தி 25 April 2020 5:17 AM GMT (Updated: 2020-04-25T10:47:15+05:30)

]விலங்குகளைப்போல் கூண்டுக்குள் மனிதர்கள் அடைபட்டுள்ளதாக நடிகை தமன்னா தெரித்துள்ளார்.

சென்னை,

நடிகை தமன்னா கொரோனாவால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். அவர் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் விலங்குகளைப்போல் மனிதர்கள் கூண்டுக்குள் அடைபட்டு உள்ளனர். இந்த நேரத்தில் பிரபஞ்சம் சில உண்மைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு முக்கியம். இதை கடைப்பிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க முடியாது. சமூக விலகல் அவசியம். வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவுக்கு நிறைய உயிர்களை இழந்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கிறது. சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இயற்கைக்கும், விலங்குகளுக்கும் எதிராக செயல்பட்டதற்காக இந்த பிரபஞ்சம் நமக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் பசியால் யாரும் தூங்க செல்லக்கூடாது என்ற உறுதியை எடுத்து இருக்கிறேன். அதற்காக தொண்டு அமைப்புடன் இணைந்து தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறேன்.

இந்த நேரத்தில் கஷ்டப்படுவோருக்கு உதவ நன்கொடை அளியுங்கள். உங்களை பற்றி மட்டும் நினைக்காமல் எல்லோருடைய நலனை பற்றியும் சிந்தியுங்கள்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Next Story