சினிமா செய்திகள்

டிக் டாக் தளத்தில் புதிய சாதனையை படைத்த மாஸ்டர் படத்தின் ஆல்பம் - அனிருத் டுவீட் + "||" + THALAPATHY’S MASTER CREATES A MASSIVE RECORD

டிக் டாக் தளத்தில் புதிய சாதனையை படைத்த மாஸ்டர் படத்தின் ஆல்பம் - அனிருத் டுவீட்

டிக் டாக் தளத்தில் புதிய சாதனையை படைத்த மாஸ்டர் படத்தின் ஆல்பம் - அனிருத் டுவீட்
டிக் டாக் தளத்தில் புதிய சாதனையை மாஸ்டர் படத்தின் ஆல்பம் படைத்துள்ளதாக அனிருத் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச் 15 அன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. 

இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடலான  ‘குட்டி ஸ்டோரி' பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இந்த படத்தின் 2-வது பாடலான ‘வாத்தி கம்மிங்' என்ற பாடல், சென்னை லோக்கல் ஸ்லாங் பாடல் வரிகளுடன் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

அதன் பிறகு வாத்தி ரெய்டு, விஜய்சேதுபதியின் பொளக்கட்டும் பற பற போன்ற பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆல்பம் டிக் டாக் தளத்தில் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. 

வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் இதுவரை டிக் டாக் தளத்தில் 1500 மில்லியன் வியூஸ் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்துள்ளார்.