சினிமா செய்திகள்

வீட்டில் இருக்க முடிவு செய்தால் நம்ம நிலை என்னவாகும்? - நடிகை காயத்ரி + "||" + If this is the respect we give to the people that are saving our lives, we have failed as a society Gayathrie

வீட்டில் இருக்க முடிவு செய்தால் நம்ம நிலை என்னவாகும்? - நடிகை காயத்ரி

வீட்டில் இருக்க முடிவு செய்தால் நம்ம நிலை என்னவாகும்?  -  நடிகை காயத்ரி
மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவு செய்தால் நம்ம நிலை என்னவாகும்? என நடிகை காயத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ், சித்திரம் பேசுதடி 2, ரம்மி, சீதக்காதி, வெள்ளராஜா, புரியாத புதிர், படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி. சமீபத்தில் கொரோனாவால் இறந்த டாக்டர் உடலை புதைக்க விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து காயத்ரி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவு செய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். 

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.