சில்லுக் கருப்பட்டி படத்தின் இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி


சில்லுக் கருப்பட்டி படத்தின் இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி
x
தினத்தந்தி 25 April 2020 9:55 AM GMT (Updated: 2020-04-25T15:25:43+05:30)

சில்லுக் கருப்பட்டி படத்தின் இயக்குநரை நடிகை சாய்பல்லவி பாராட்டி உள்ளார்.

சென்னை,

கடந்த வருட இறுதியில் வெளியான சில்லுக் கருப்பட்டி படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகை சாய் பல்லவி பாராட்டி உள்ள அப்படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தப் படத்தைத் தற்போது பார்த்துள்ள நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ஹலிதா ஷமீமைப் பாராட்டியுள்ளார். அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளதாவது:

நானும் என் பெற்றோர்களும் படம் பார்த்து மிகவும் உணர்வுபூர்வமானோம். இதமாக உணர வைத்ததற்கு நன்றி. இதுபோன்ற அற்புதங்களை மேலும் நீங்கள் படைக்கவேண்டும் என்று பாராட்டியுள்ளார்.

முன்னதாக ஹலிதா ஷமீம் வெளியிட்டுள்ள பதிவில்,லாக்டவுனின் பெரும்பாலான நேரத்தில் என்னை மனச்சோர்வடையச் செய்தது. பின்னர், தேவதை எனக்கு செய்தி அனுப்பினார் என பதிவிட்டுள்ளார்.

Next Story