சினிமா செய்திகள்

அடுத்த ஆட்டோகிராப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் - ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சேரன் + "||" + Let's start from the next autograph meal Cheran

அடுத்த ஆட்டோகிராப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் - ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சேரன்

அடுத்த ஆட்டோகிராப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் - ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சேரன்
அடுத்த ஆட்டோகிராப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் என ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சேரன் பதில் அளித்துள்ளார்.
சென்னை, 

சேரன் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இயக்குனராக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பின்னர் நான்கு தமிழ் நாடு பிலிம்ஸ் விருதுகளும், ஐந்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை படங்களுக்கும் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானார். 

இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, போர்க்களம், வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படங்களின் வெற்றியி மூலம் பிரபலமான இவர், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக கண்டறியப்பட்டார்.

இயக்குனராக இவர் அடைந்த பிரபலத்தை தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார். பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படத்திற்கு நடிகராகவும், இயக்குனராகவும் பல விருதுகளை வென்றுள்ளார்.

இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனிதன் தனது ஒவ்வொரு பருவத்திலும் சந்திக்கும் காதலை அற்புதமாக திரையிட்டு காட்டியிருப்பார் சேரன்.

ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை தொடும் வகையில் இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராஃப் படம் 3 தேசிய விருதுகளை குவித்தது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் வருதுகளையும் அள்ளியது ஆட்டோகிராஃப்.

இதனை தொடர்ந்து ஆட்டோகிராப் - 2 வருமா என ரசிகர்கள் காத்திருந்தனர். மேலும் கடந்த ஆண்டு ஒரு ரசிகர் ஒரு சேரனின் டுவிட்டர் பக்கத்தில் ஆட்டோகிராப் - 2 வருமா என கேட்டார் அதற்கு நிச்சயமாக வரும் என பதில் அளித்தார் சேரன். 

இந்நிலையில் நேற்று  தனியார் டிவியில் ஆட்டோகிராப் படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இயக்குநர் சேரனையும் அவரது படைப்பையும் பாராட்டினர்.  பாராட்டியவர்களுக்கு எல்லாம் நன்றி இயக்குநர் சேரன் கூறினார்.

இந்நிலையில் ஒரு ரசிகர், சிறந்த படம் மீண்டும் மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷமான முடிவு, நானும் இருபது தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் வந்ததுக்கு நன்றி'ன்னு மட்டும் சொல்றீங்க. சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லி இருக்கலாம் இல்ல சார் என கேட்டு க்ளைமேக்ஸில் சேரன் ஆடியன்ஸ்க்காக பேசும் காட்சியையும் ஷேர் செய்திருந்தார்.

ரசிகரின் அந்த பதிவை பார்த்த இயக்குநர் சேரன், ஹா ஹா என சிரித்து நல்ல கேள்வி.. அடுத்த ஆட்டோகிராஃப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்... நன்றி இருபது தடவைக்கு மேல பார்த்ததுக்கு என பதில் கூறினார்.