பிரச்சினையில் சிக்கியது, ‘பொன்மகள் வந்தாள்’ஜோதிகா படத்தை இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஆதரவு; தியேட்டர் அதிபர் எதிர்ப்பு


பிரச்சினையில் சிக்கியது, ‘பொன்மகள் வந்தாள்’ஜோதிகா படத்தை இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஆதரவு; தியேட்டர் அதிபர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 April 2020 4:36 AM GMT (Updated: 26 April 2020 4:36 AM GMT)

பிரச்சினையில் சிக்கியது, ‘பொன்மகள் வந்தாள்’ஜோதிகா படத்தை இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஆதரவு; தியேட்டர் அதிபர் எதிர்ப்பு

சென்னை,

ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் பிரச்சினையில் சிக்கியது. அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட ஒரு தயாரிப்பாளர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதற்கு தியேட்டர் அதிபர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில், “படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்.

இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-

‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாக வந்த தகவல் கேட்டு தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தோம். திரையரங்குகளில் திரையிடுவதற்கு முன்பு இணையதளத்தில் வெளியிடுவது தொழில் தர்மத்துக்கு விரோதமானது. படத்தை அப்படி வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டோம். அதை பட நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இணையதளத்தில் படத்தை வெளியிடுவதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.அந்த பட நிறுவனம் தொடர்பாக மற்ற பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் இணையதளத்திலேயே திரையிட்டு கொள்ளட்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story