சினிமா செய்திகள்

அப்பாவை போல இருக்கும் புகைப்படம் டுவிட்டரில் பகிர்ந்த விஷ்ணு விஷால் + "||" + Real vs reel VISHNU VISHAL - stay home stay

அப்பாவை போல இருக்கும் புகைப்படம் டுவிட்டரில் பகிர்ந்த விஷ்ணு விஷால்

அப்பாவை போல இருக்கும் புகைப்படம் டுவிட்டரில் பகிர்ந்த விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷாலின் ராட்சசன் லுக் அவரது அப்பாவை போல இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் நடிகர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். 

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தனது அப்பா போட்டோ மற்றும் ராட்சசன் கெட்டப் போட்டோ இரண்டையுமே ஒப்பீடு செய்து டுவிட் செய்துள்ளார். அந்த டுவீட்டை பார்த்த ரசிகர்கள், அப்படியே அச்சு அசலாக உங்க அப்பா போலவே இருக்கீங்க என பாராட்டி வருகின்றனர்.

இந்த இரண்டு புகைப்படங்களுக்கு நடுவே கருப்பு / வெள்ளை மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. மற்ற படி நீங்க அப்படியே உங்க அப்பா சாயலில் தான் உள்ளீர்கள், அவர் நிச்சயம் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள். அடுத்ததாக உங்கள் நடிப்பில் வரவிருக்கும் எஃப்.ஐ.ஆர்., காடன் மற்றும் மோகன் தாஸ் படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.  விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா டிஜிபி ஆக பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. “எல்லா கதாநாயகர்களுக்கும் அதிரடி நாயகனாக ஆசை...”
வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால்