போலீசாருக்கு என்95 மாஸ்க் வழங்கி உதவி செய்த நடிகர் யோகி பாபு


போலீசாருக்கு என்95 மாஸ்க் வழங்கி உதவி செய்த நடிகர் யோகி பாபு
x
தினத்தந்தி 26 April 2020 7:07 AM GMT (Updated: 2020-04-26T12:37:16+05:30)

போலீசாருக்கு என்95 மாஸ்க் வழங்கி யோகி பாபு உதவி செய்துள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் நிலவேம்பு கசாயம், கபசுர 

குடிநீர் ஆகியவை வாங்கி கொடுத்துள்ளார். சென்னை ட்ராபிக் போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீஸாருக்கு அவர் இதை வழங்கியுள்ளார்.இதற்கு முன்பு வேலை இன்றி தவித்து வரும் சினிமா தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வாங்கி கொடுத்தார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story