சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல் + "||" + It is reported that the master film will take 3 months to come on screen

மாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல்

மாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல்
மாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள்.

இந்தநிலையில்,  கொரோனாவால் தமிழகத்தில் உள்ள திரையங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து முழுமையாக செயல்பாட்டிற்கு வர 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் தளர்ந்து திரையரங்குகளில் முழுமையாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில் தான் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அப்படியானால் குறைந்த பட்சம் மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...