சினிமா செய்திகள்

ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிய நடிகை பிரணிதா + "||" + Pranitha Subhash hailed for her kind work, served 75,000 meals

ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிய நடிகை பிரணிதா

ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிய நடிகை பிரணிதா
ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை நடிகை பிரணிதா வழங்கி உள்ளார்.
ஐதராபாத்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உணவு இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசு, தன்னார்வலர்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் சூர்யாவுடன் ‘மாஸ்’ மற்றும் கார்த்தி ஜோடியாக ‘சகுனி’ படங்களில் கதாநாயகியாக நடித்த பிரணிதா கடந்த 21 நாட்களாக தினமும் பசியால் வாடும் பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு உணவு சமைத்து, 
வழங்கி வருகிறார். 

ஒர்க்கவுட் செய்வது, புகைப்படங்களை பதிவிடுவது என இந்த லாக்டவுன் நேரத்தில் பொழுது போகாமல் பல ஹீரோயின்கள் வீட்டிலேயே கிடக்கும் நிலையில், சில ஹீரோயின்கள் முன்வந்து கொரோனா உதவிகளை செய்து 
வருகின்றனர். அந்தவகையில் நடிகை பிரணிதா கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கி உள்ளார்.