சினிமா செய்திகள்

பிரபாசுடன் திருமணமா? நடிகை நிஹரிகா விளக்கம் + "||" + Married to Prabhas? Description of actress Nihirika

பிரபாசுடன் திருமணமா? நடிகை நிஹரிகா விளக்கம்

பிரபாசுடன் திருமணமா? நடிகை நிஹரிகா விளக்கம்
பிரபாசுடன் திருமணமா? நடிகை நிஹரிகா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,

பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.

தற்போது கொரோனா ஊரடங்கில் பிரபாஸ் திருமணம் பற்றி இன்னொரு தகவல் பரவி உள்ளது. அதாவது நடிகை நிஹரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நிஹரிகா, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மற்றுமொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த செய்தி குறித்து நிஹரிகா கூறும்போது, “பிரபாசை திருமணம் செய்து கொள்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி. இதுபோன்ற வதந்தியை பரப்புவது யார்? என்று தெரியவில்லை. இந்த வதந்திகளை மக்கள் நம்புவதும் எனக்கு வியப்பாக உள்ளது” என்றார்.

நிஹரிகா ஏற்கனவே நாகசவுரியா, சாய் தரம் தேஜ், விஜய் தேவரகொண்டா ஆகியோருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.