சினிமா செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் லாரன்ஸ் ரூ.12 லட்சம் உதவி + "||" + Actor Lawrence gets Rs 12 lakh

மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் லாரன்ஸ் ரூ.12 லட்சம் உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் லாரன்ஸ் ரூ.12 லட்சம் உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் லாரன்ஸ் ரூ.12 லட்சம் உதவி செய்துள்ளார்.
சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. ஏழைகள் உணவுக்கு கஷ்டப்படும் நிலைமை இருக்கிறது. அவர்களுக்கு நடிகர்-நடிகைகள், தொண்டு நிறுவனத்தினர் உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான ‘பெப்சி’, நடிகர் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல கோடி நிவாரண உதவிகள் வழங்கினார். கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள 50 அம்மா உணவகங்களில் 3-ந்தேதி வரை மக்களுக்கு இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதல் கட்டமாக ரூ.12½ லட்சம் நிதி வழங்கி இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.