தூா்தா்ஷனில் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணா தொடரை ஒளி பரப்ப முடிவு


தூா்தா்ஷனில் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணா தொடரை ஒளி பரப்ப முடிவு
x
தினத்தந்தி 27 April 2020 6:51 AM GMT (Updated: 27 April 2020 12:04 PM GMT)

ஸ்ரீகிருஷ்ணா தொடரை மீண்டும் ஒளி பரப்ப தூா்தா்ஷன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் தேசிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொடா்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ராமாயணம் தொடா், மார்ச் 28-ஆம் தேதி சனிக்கிழமை முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், மகாபாரதம் தொடா், டிடி பாரதி தொலைக்காட்சியில் மார்ச் 28-ஆம் தேதி சனிக்கிழமை முதல் தினமும் நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ராமாயணம் தொடா், முதன் முதலில் தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டிலும், மகாபாரதம் தொடா் கடந்த 1988-ஆம் ஆண்டிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தநிலையில், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்கள் தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதைப் போன்று ராமானந்த சாகரின் புராணத் தொடரான ‘ஸ்ரீகிருஷ்ணா’ மீண்டும் ஒளிபரப்பப்படும் என தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூா்தா்ஷனில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட, ‘ஸ்ரீ கிருஷ்ணா’ புராணத் தொடா் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

ராமானந்த் சாகா் எழுதி இயக்கிய இந்தத் தொடா் கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரித்தது. இந்த நிகழ்ச்சி முதன்முதலில் தூா்தா்ஷனின் மெட்ரோ சேனலில் (டிடி 2) 1993 முதல் ஒளிபரப்பப்பட்டது. பின்னா், 1996-இல் தூா்தா்ஷனின் நேஷனல் சேனலுக்கு மாற்றப்பட்டது.

Next Story