சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா; பாடல் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ் + "||" + Surprise for fans by releasing the song Super Singer fame Priyanka

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா; பாடல் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ்

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா; பாடல் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ்
சூப்பர் சிங்கர் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பாடல் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்துள்ளார்.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா பாடல் ஒன்றினை பாடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் . அந்த பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.  'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பிரியங்காவின் குரலில் ஒலித்த 'சின்னச் சின்ன வண்ணக் குயில் ' என்றபாடலின் மூலம் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்திழுத்தது எனலாம்.  ஊரடங்கு சமயத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்காவும் பாடல் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்துள்ளார்.
View this post on Instagram

@arrahman #arr#musicheals

A post shared by Priyanka Nk (@priyankank) on